Showing posts with label Tech News. Show all posts
Showing posts with label Tech News. Show all posts

Wednesday, 23 August 2017

உங்கள் கீபோர்டில் ஒளிந்திருக்கும் இரகசியமான 32 காம்பினேஷன் ஷார்ட்கட்ஸ்.!


இன்று உலக அளவில் கணினியின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, கணினி மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்டது எனக் கூறப்படுகிறது, மேலும் கல்வி, மருத்துவம், அலுவலகப்பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் அதிகம் பயன்படுகிறது இந்த கணினி. அலுவலகப் பணிகளுக்கும் கணினியின் பயன் அளவிடற்கரியதாகும். அலுவலகக் கோப்புகளையும் ஊழியர்களின் விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொள்வதற்குக் கணினி பெரும் துணைபுரிகிறது. 


கடிதங்களைத் தயாரித்தல், ஊழியர்களின் வரவு செலவு, சம்பளம் போன்றவற்றைத் தாயாரித்தலிலும் கணினி உதவுகிறது கணினியில் மவுசைதான் நாம் அதிகம் உபயோகம் செய்கின்றோம், ஆனால் மிக எளிமையாக ஷார்ட் கட் பயன்படுத்தினால் கணினியில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை குறைந்த நேரத்தில் செய்யதுவிடலாம், மேலும் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலார்கள் அனைவரும் இந்த கீபோர்டு ஷார்ட் கட் பயன்பாட்டை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்க்கு பல வழிமுறைகள் உள்ளன, பின் வரும் ஸ்லைடர்களில் அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம் முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!




வழமுறை- 1: Windows:


விண்டோஸ் என்ற பொத்தானை அழுத்தினால் அனைத்து மெனுவும் திறக்கப்படும், தேவையான விருப்பத்தை தேர்வு செய்ய முடியும். Win + A: விண்டோஸ் 10-இல் கணியின் மையத்தை திறக்கிறது. Win + B: அறிவிப்புப் பகுதியின் முதல் ஐகானைத் தேர்வுசெய்கிறது அம்புக்குறி விசையைப் பயன்படுத்தி சின்னங்களை மாற்றலாம்.






வழிமுறை-2: 
Win + Ctrl + B:அறிவிப்புப் பகுதியில் புதிய செய்தியை கொண்டுவந்து கொடுக்கும். Win + C: இந்தப் பயன்பாடு விண்டோஸ் 10-இல் உள்ளது, ஆதரிக்கப்படும் மொழியைப் பயன்படுத்த முடியும். Win + D: உடனடியாக டெஸ்க்டாப்பைக் காட்டுகிறது


வழிமுறை-3: 

Win + E: இந்தப் பயன்பாடு விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் திறக்கிறது. Win + F: கோப்புகள் மற்றும் கோப்புறைகள் கண்டுபிடிக்க உதவுகிறது. Win + Ctrl + F : கணினியைப் பற்றி தெரிந்துகொள்ள இவை உதவுகிறது.




வழிமுறை-4: 

Win + G: விண்டோஸ் 7, விஸ்டா, விண்டோஸ் 10 போன்றவற்றில் விளையாட்டு பட்டியலைக் கொடுக்கிறது. Win + K:ஒரு புதிய தொடக்க மெனுவை திறக்கிறது, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1-இல் பயன்படுகிறது. Win + L: விண்டோஸ் லாக் செய்ய இந்த பயன்பாடு உள்ளது.



வழிமுறை-5: 

Win + M: உங்கள் திரையை மினிமைஸ் செய்ய உதவுகிறது. Win + ⇧ Shift + M: நீங்கள் மினிமைஸ் செய்த பகுதியை ரீஸ்டோர் செய்ய உதவுகிறது. Win + O : இந்தப் பயன்பாடு கீரோஸ்கோப் செயல்பாட்டை முடக்குகிறது.
வழிமுறை-6:

 Win + P : வெளிப்புற மானிட்டர் ஃ ப்ரொஜெக்டருக்கு இயக்க உதவியாக உள்ளது. Win + Q: மெனுவில் பயன்பாடுகளுக்கான தேடல் எனக் கூறப்படுகிறது. Win + R : பொதுவாக ரன் டயலாக் பாக்ஸ் திறக்க உதவுகிறது.

வழிமுறை-7: Win + T:தேவையான டாஸ்க்பார் ஒபன் செய்ய உதவுகிறது. Win + U: யுடிலிட்டி மேனேஜர் பகுதியை திறக்க உதவுகிறது. Win + W: விண்டோஸ் இன்க் பகுதியை பயன்படுத்த முடியும். Win + X: விண்டோஸ் மொபைல் அப்ளிகேஷன் சென்டர் திறக்க உதவுகிறது. Win + Y :யாஹூ மெஸ்சென்ஜ்ர் பகுதிக்கு செல்ல முடியும்.

Read More »

Tuesday, 22 August 2017

இந்த 5 வயது சிறுவன் நாசாவிற்கு அனுப்பிய கடிதம் என்னவென்று கூறினால் நம்புவீர்களா


சமீபத்தில் நாசாவின் கிரக பாதுகாப்பு அதிகாரி பணிக்கு 9 வயது சிறுவன் விண்ணப்பித்திருந்தான், ஞாபகம் இருக்கிறதா.?





"ஏலியன்களிடம் இருந்து இந்த உலகத்தை என்னால காப்பாற்ற முடியும். நான் நிறைய ஏலியன் சார்ந்த திரைப்படங்கள் கண்டுள்ளேன். அவ்வளவு ஏன் நானே ஒரு ஏலியன் தான், என்னை ஏலியன் என்று தான் என் சகோதிரி அழைப்பாள்" என்று மிகவும் அப்பாவித்தனமான கடிதமொன்றை நாசாவிற்கு அனுப்பிவைத்தான் அல்லவா.! 




அந்த சம்பவம் நடந்து ஒருமாத காலம் கூட ஆகவில்லை. தற்போது 5 வயது சிறுவன் ஒருவன் நாசாவிற்கு நம்பமுடியாத கடிதமொன்றை அனுப்பியுள்ளான். அந்த கடிதத்தின் மிக முக்கியமான பகுதியே அந்த "ராக்கெட் டிசைன்" தான்.! முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! 



ப்ளூ பிரிண்ட் முன்மாதிரி இட்ரிஸ் ஹில்டன் என்ற இச்சிறுவன் ராக்கெட் ஒன்றை உருவாக்குமாறு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். மேலும், அந்த கடித்ததோடு ராக்கெட் டிசைனின் "ப்ளூ பிரிண்ட் முன்மாதிரி"யையும் இணைத்துள்ளான்.




இந்த ராக்கெட் உங்களுக்கானது அதாவது அந்த கடிதத்தில் - நாசாவிற்கு, நான் உங்களுக்காக ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். "இந்த ராக்கெட் உங்களுக்கானது. தயவுசெய்து இதை விண்வெளிக்கு விண்வெளி வீரருடன் அனுப்பி வைக்கவும், நான் எனது ராக்கெட்டை நாசாவிற்கு விண்வெளிக்கு அனுப்புவேன்" என்று எழுதியுள்ளான்.





பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தனது மகனின் வடிவமைப்பிற்க்கு விண்வெளி நிறுவனத்திடம் இருந்து பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், இட்ரிஸ் தந்தையான ஜமால், வாஷிங்டன் டி.சி-யில் உள்ள நாசாவின் தலைமையகத்திற்கு இக்கடிதத்த அனுப்பினார்.



கடிதத்தை அனுப்பியது மட்டுமின்றி நாசாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் அதை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது "என் 5 வயது மகன், அவனது #ராக்கெட் வடிவமைப்பை #நாசாவிற்கு அனுப்பியுள்ளான். மேலும் அவன் "அஸ்ட்ரோனட் லைசன்ஸ்" கேட்கிறான் என்று பதிவிட்டுள்ளார்.



ஒரு நாள் நீ எங்களோடு இணைவாய் இதற்கு பதிலளித்துள்ள நாசா "ஒரு பெரிய எதிர்கால விண்வெளி வீரருக்கான சரியான தொடக்கம் இது. இச்சிறுவன் விண்வெளி நோக்கி பயணம் செய்ய நான் வாழ்த்துகிறேன். உங்களை போன்ற இளம் நபர்களை முழுமையாக ஊக்குவிக்கவும், எங்களின் 110 சதவிகிதத்தை கொடுக்கவும் விரும்புகிறோம், அப்போதுதான் ஒரு நாள் நீ எங்களோடு இணைவாய்" என்று உற்சாகப்படுத்தியுள்ளது.






புதிய பிரகாசமான யோசனை மேலும் "நாசா புதிய பிரகாசமான யோசனைகளை கொண்ட அடுத்தகட்ட தலைமுறை மக்களையும், விண்வெளி ஆய்வு மீதான உங்களின் காதலையும் எதிர்நோக்குகிறது" என்றும் பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளது. நாசாவின் பதிலைப் பெற்ற இட்ரிஸ், "நான் விண்கலங்களில் பறக்க விரும்புகிறேன்" என்று பேட்டியளித்துள்ளான். 
Read More »

Monday, 21 August 2017

Bringing science and development together through news and analysis

British scientists have developed the worlds smallest surgical robot which could transform daily operations for tens of thousands of patients, the media reported on Sunday.

Representational image. Reuters

Representational image. Reuters

From a converted pig shed in the Cambridgeshire countryside, a team of 100 scientists and engineers have used low-cost technology originally developed for mobile phones and space industry to create the first robotic arm specifically designed to carry out keyhole surgery, reports the Guardian.

The robot, called Versius, mimics the human arm and can be used to carry out a wide range of laparoscopic procedures including hernia repairs, colorectal operations, and prostate and ear, nose and throat surgery, in which a series of small incisions are made to circumvent the need for traditional open surgery.

The robot is controlled by a surgeon at a console guided by a 3D screen in the operating theatre, according to its maker Cambridge Medical Robotics.

"Having robots in the operating theatre is not a new idea," said the company's chief executive, Martin Frost.

"But the problem at the moment is that they are phenomenally expensive, not only do they cost $2.5 million each to buy but every procedure costs an extra $3,800 using the robot... and they are very large."

The Cambridge Medical Robotics said it was already working with a number of National Health Services-owned and private hospitals to introduce the robots.

The current global market for surgical robots is worth approximately $4 billion a year but this is expected to grow to $20 billion by 2024.
Read More »